கண்டி லைன் பள்ளிவாசல் மற்றும் கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கை ..

id=id_aa51_b1c8_c5f1_ca9dஇக்பால் அலிகொரேனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து வருகை தரும் நபர்கள் 14 தினங்கள் தங்க வைத்து சுய நிவாரணம் பெற்றுக் கொள்வதற்காக கண்டி கட்டுக்கலை தாருல் உலூம் அல் புர்கானியா அரபுக் கல்லூரியின் கட்டிடத்தை கண்டி தேசிய வைத்தியசாலைக்கு வழங்க கண்டி கட்டுக்கலை ஜம்ஆப் பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் அரபுக் கல்லூரி நிர்வாகம் முன்வந்துள்ளது.அதேவேளையில் கண்டி லைன் பள்ளி பெரிய பள்ளிவாசல் மற்றும் கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம் ஆகியன இணைந்து தேசிய வைத்தியசாலைக்கு பெறுமதி வாய்ந்த நவீன மருத்துவ  உபகரணங்கள் கொரோனா வைரஸ் தோற்றலை தடுக்கும் வைத்தியர்கள் அணியும் உடைகள் 2500 முகவுறைகள் ஆகிய பொருள்கள் வைத்தியசாலைக்கு  வழங்கி  வைக்கப்பட்டன.இந்நிகழ்வு கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரதான வைத்திய அத்தியட்சகர் அலுவலகத்தில் அத்தியட்சகர் வைத்திய அதிகாரி ஆர். எம். எஸ். கே. ரத்நாயக தலைமையில் இடம்பெற்றது.மருத்துவ உபகரணப் பொருட்களையும் மற்றும் அரபுக் கல்லூரியின் கட்டிடத்தை வழங்குவதற்கான அனுமதிக் கடிதத்தையும் தேசிய வைத்தியசாலையின் பிரதான வைத்திய அத்தியட்சகர்  ஆர் எம். எஸ். கே.  ரத்நாயகவிடம் இன்று வழங்கி வைத்தனர்.இந்நிகழ்வில் கண்டி கட்டுக்கலை தாருல்  உலூம் அல் புர்கானியா அரபுக் கல்லூரியின் பணிப்பாளரும் கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் தலைவருமான  எச். சலீம்தீன் சிரேஷ்ட சத்திர சிகிச்சை நிபுணர் எஸ். எம். எம். நியாஸ் கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலவமா சபைத் தலைவரும் அரபுக் கல்லூரியின் அதிபருமான மௌலவி உமர்தீன் கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவரும் கட்டுக்கலை ஜம்ஆப் பள்ளிவாசலின் நிர்வாகச  சபையின் பொதுச் செயலாளருமான கே. ஆர். ஏ. சித்தீக் கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் செயலாளர் ரஹ்மான் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.   link: https://www.madawalaenews.com/2020/03/huh.html title: கண்டி லைன் பள்ளிவாசல் மற்றும் கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கை ..
Wed, Mar 25 2020 19:01:05

0 Comments

Live Radio App

நேரடி வானொலி


சமூக வலைத்தளம்அரசியல் வீடியோ


வசந்தம் தொலைக்காட்சிஎம்மைப்பற்றி

நேர்மையான அரசியலின் மாற்று அரங்கம் - இது மக்களின் நியாயத்தராசு.
உங்களது செய்திகளை தராசு இணையத்தில் பதிவு செய்ய கீழுள்ள மின்னஞ்சலூடு தொடர்புகொள்ளுங்கள்.

info@tharaasu.com