50 இலட்சம் ரூபாய்களை காத்தான்குடி பள்ளிவாயல்கள் நிறுவன சம்மேளனத்திற்கு வழங்கிய ஹிஸ்புழ்ழாஹ்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள  காத்தான்குடி பாலமுனை காங்கேயனோடை பூனொச்சிமுனை மஞ்சந்தொடுவாய் ஆகிய பிரதேசங்களில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லீம் நிறுவனங்களின் சம்மேளனமும் காத்தான்குடி பிரதேச செயலகமும் இணைந்து தெரிவு செய்த  நாளாந்தம் கூலித் தொழில் செய்கின்ற தற்போது வீடுகளில் முடங்கிக் கிடக்கும் வசதியற்ற 4000 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்கு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் அவர்களால்  சுமார் 50 இலட்சம் ரூபாய் நிதியினை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கு வழங்கி வைத்தார்.பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் காத்தான்குடி நகர சபை நகர முதல்வர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம் அஸ்பர் ஜே.பி காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள்மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள்  காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும் காத்தான்குடி பிரதேச செயலகமும் இணைந்து பள்ளி வாயல்களினூடாக தெரிவு செய்யப்பட்ட 4000 குடும்பங்களுக்கு  உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.link: http://www.jaffnamuslim.com/2020/03/50.html title: 50 இலட்சம் ரூபாய்களை காத்தான்குடி பள்ளிவாயல்கள் நிறுவன சம்மேளனத்திற்கு வழங்கிய ஹிஸ்புழ்ழாஹ்
Wed, Mar 25 2020 21:01:42

0 Comments

Live Radio App

நேரடி வானொலி


சமூக வலைத்தளம்அரசியல் வீடியோ


வசந்தம் தொலைக்காட்சிஎம்மைப்பற்றி

நேர்மையான அரசியலின் மாற்று அரங்கம் - இது மக்களின் நியாயத்தராசு.
உங்களது செய்திகளை தராசு இணையத்தில் பதிவு செய்ய கீழுள்ள மின்னஞ்சலூடு தொடர்புகொள்ளுங்கள்.

info@tharaasu.com