நான் உங்களை கெஞ்சிக்கேட்கின்றேன் கண்ணீருடன் கெஞ்சும் பொலிஸ் உத்தியோகத்தர்

கொரோனா வைரஸ் மிகவும் கொடூரமானது. தயவு செய்து வெளியே வராதீர்கள் வீடுகளிலேயே தங்கிக்கொள்ளுங்கள் என போக்குவரத்து காவல் துறை உத்தியோகத்தர் ஒருவர் வாகன சாரதிகளிடம் கண்ணீர்விட்டு கதறி கெஞ்சும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா தொற்றானது சீனாவை கடந்து இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்ற நிலையில் அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனினும் கொரோனாவின் தாக்கம் தொடர்பில் பகிடியாக நினைத்துக்கொண்டிருக்கும் சிலர் வாகனங்களில் பல இடங்களுக்கு சென்று வருகின்றனர்.அதிகமானவர்களுடன் பழகுவதை நிறுத்துவதற்கே ஊரடங்கு உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் இந்த நிலையில் அனைத்தையும் விளையாட்டாக யோசிப்பது தவறாகும் என காவல் துறை உத்தியோகத்தர் ஒருவர் தெரிவிக்கின்றார்.அது மாத்திரம் இன்றி “நான் உங்களை கெஞ்சிக்கேட்கின்றேன். வெளியே வராதீர்கள். கொரோனாவின் தாக்கத்தை புரிந்துக்கொள்ளுங்கள். உங்கள் கால்களிலும் விழுந்து கேட்கிறேன். தயவு செய்து வீடுகளிலிருந்து வெளியே வராதீர்கள்“ என கூறியப்படி கதறி அழுகின்றார் இந்த காவல் துறை உத்தியோகத்தர்.இந்த சம்பவம் இந்தியா - தமிழகம் - இராயப்பேட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.link: http://www.jaffnamuslim.com/2020/03/blog-post_760.html title: நான் உங்களை கெஞ்சிக்கேட்கின்றேன் கண்ணீருடன் கெஞ்சும் பொலிஸ் உத்தியோகத்தர்
Wed, Mar 25 2020 21:00:31

0 Comments

Live Radio App

நேரடி வானொலி


சமூக வலைத்தளம்அரசியல் வீடியோ


வசந்தம் தொலைக்காட்சிஎம்மைப்பற்றி

நேர்மையான அரசியலின் மாற்று அரங்கம் - இது மக்களின் நியாயத்தராசு.
உங்களது செய்திகளை தராசு இணையத்தில் பதிவு செய்ய கீழுள்ள மின்னஞ்சலூடு தொடர்புகொள்ளுங்கள்.

info@tharaasu.com