இலங்கையில் இன்று கொரோனா தொற்றாளர்கள் எவரும் பதிவாகவில்லை

இன்றைய தினம் (25) மாலை 4.30 மணி வரையில் எந்தவொரு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றாளரும் நாட்டில் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கோவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் அமைச்சர் இதனை தெரிவித்தார். அதன்படி இதுவரை இந்நாட்டில் 102 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் 255 பேர் நாடு பூராகவும் உள்ள 21 வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை நேற்றைய தினம் புதிதாக 5 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.. மேலும் நாடு பூராகவும் அமைக்கப்பட்டுள்ள 43 தனிமைப்படுத்தல் நிலையங்களில் மூன்றாயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.link: http://www.jaffnamuslim.com/2020/03/blog-post_391.html title: இலங்கையில் இன்று கொரோனா தொற்றாளர்கள் எவரும் பதிவாகவில்லை
Wed, Mar 25 2020 13:02:11

0 Comments

Live Radio App

நேரடி வானொலி


சமூக வலைத்தளம்



அரசியல் வீடியோ


வசந்தம் தொலைக்காட்சி



எம்மைப்பற்றி

நேர்மையான அரசியலின் மாற்று அரங்கம் - இது மக்களின் நியாயத்தராசு.
உங்களது செய்திகளை தராசு இணையத்தில் பதிவு செய்ய கீழுள்ள மின்னஞ்சலூடு தொடர்புகொள்ளுங்கள்.

info@tharaasu.com