ஊரடங்குக்கு கட்டுப்பட முஸ்லிம்களை வலியுறுத்துங்கள் - பொலிஸ் தலைமையகம் ACJU விடம் வேண்டுகோள்

- அன்ஸிர் - கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசாங்கத்தின் வழிநடத்தலில் பொலிஸ் ஊரடங்கு நாடு முழுவதும் அமுலில் உள்ளது.இந்நிலையில் பொலிஸ் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை 25 ஆம் திகதி மாலை பொலிஸ் அதிகாரிகளுக்கும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகளுக்கும் முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.இதன்போது ஊரடங்குச் சட்டத்தை முற்று முழுதாக கடைபிடிக்குமாறு முஸ்லிம்களை அறிவுறுத்துமாறு பொலிஸ் தலைமையகம் ஜம்மியத்துல் உலமாவை கேட்டுக் கொண்டுள்ளது. இதற்காக பள்ளிவாசல்களை பயன்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் மேலும் சட்டிக்காட்டியுள்ளது.பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக இதுவரை சுமார் 3000 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஊரடங்குச் சட்டத்தை முஸ்லிம்கள் மதிக்கிறார்கள் இல்லை இதனால் ஒருதொகை முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற தகவலும் விமர்சனங்களும் வெளியாகியுள்ள நிலையில் பொலிஸ் தலைமையகம் ஜம்மியத்துல் உலமாவை அழைத்து இந்த மேலதிக வேண்டுகோளை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.link: http://www.jaffnamuslim.com/2020/03/acju_25.html title: ஊரடங்குக்கு கட்டுப்பட முஸ்லிம்களை வலியுறுத்துங்கள் - பொலிஸ் தலைமையகம் ACJU விடம் வேண்டுகோள்
Wed, Mar 25 2020 15:00:16

0 Comments

Live Radio App

நேரடி வானொலி


சமூக வலைத்தளம்



அரசியல் வீடியோ


வசந்தம் தொலைக்காட்சி



எம்மைப்பற்றி

நேர்மையான அரசியலின் மாற்று அரங்கம் - இது மக்களின் நியாயத்தராசு.
உங்களது செய்திகளை தராசு இணையத்தில் பதிவு செய்ய கீழுள்ள மின்னஞ்சலூடு தொடர்புகொள்ளுங்கள்.

info@tharaasu.com