கொரோனாவினால் அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்ட 2 ஆவது நாடாக ஸ்பெய்ன்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி ஸ்பெய்னில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 3434 ஆக உயர்வடைந்துள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.இதன் மூலம் கொரோனாவினல் அதிகமாக உயிரிழப்புகள் ஏற்பட்ட இரண்டாவது நாடாக ஸ்பெய்ன் தற்போது பதிவாகியுள்ளது.அத்துடன் ஸ்பெய்னில் மொத்தமாக கொரோனா தொற்றுக்குள்ளானவவர்களின் எண்ணிக்கையும் 47610 ஆக காணப்படுகின்றது.கொரோனா பரவலின் ஆரம்பமான நாடான சீனாவில் இதுவரை 3281 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு தேசிய சுகாதார ஆணையகம் கூறியுள்ளது.இதேவேளை ‍அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளி விபரங்களின்படி இத்தாலியிலேயே கொரோனாவினால் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக 6820 பேர் உயிரிழந்துள்ளனர்.link: http://www.jaffnamuslim.com/2020/03/2_25.html title: கொரோனாவினால் அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்ட 2 ஆவது நாடாக ஸ்பெய்ன்
Wed, Mar 25 2020 13:00:12

0 Comments

Live Radio App

நேரடி வானொலி


சமூக வலைத்தளம்அரசியல் வீடியோ


வசந்தம் தொலைக்காட்சிஎம்மைப்பற்றி

நேர்மையான அரசியலின் மாற்று அரங்கம் - இது மக்களின் நியாயத்தராசு.
உங்களது செய்திகளை தராசு இணையத்தில் பதிவு செய்ய கீழுள்ள மின்னஞ்சலூடு தொடர்புகொள்ளுங்கள்.

info@tharaasu.com