முகக்கவசத்தை தவறாக பயன்படுத்தினால் கொரோனா ஏற்படும் வாய்ப்பு - Dr பாபா பாலிஹவதன

முகக்கவசத்தை அணிவதற்கான நுட்பங்கள் அதன் சரியான பயன்பாடு மற்றும் அதை அகற்றுதல் ஆகியவை கவனமாக துல்லியமாக செய்யப்பட வேண்டும் அப்படி செய்யப்படாத இடத்து கொரோனா தொற்றுநோய் வேகமாக பரவும் என்று சுகாதார சேவைகள் (பொது சுகாதார சேவைகள்) பிரதி பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் பாபா பாலிஹவதன சுட்டிக்காட்டியுள்ளார்.கொரோனா தொற்றுநோய் இலங்கையில் வேகமாகப் பரவாததால் பொது மக்கள் முக கவசம் அணியத் தேவையில்லை என கருத்துரைக்கும் வைத்தியர்..மேலும் குறிப்பிடுகையில்..தற்போது அந்த முக கவசங்களை பயன்படுத்த சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.ஏதேனும் ஒரு நிகழ்வு ஏற்பட்டால் மட்டுமே முக கவசங்களை அணிய வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.மேலும் ஒரு சாதாரண நபர் அதைப் பயன்படுத்துவது கடினம் முக கவசத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் சில நேரங்களில் COVID-19 நோய்த்தொற்று ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்று டொக்டர் பாலிஹவதன எச்சரித்தார்.மேலும் 4 வைரஸ் தொற்று நோயாளர்கள் இன்று (நேற்று)பதிவாகியுள்ளதாக மருத்துவ நிபுணர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க அவர்கள் தெரிவித்தார்.இத்தாலியைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் அமெரிக்காவிலிருந்து மற்றொரு நபர். இலங்கையில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்று நோயளர்களில் பெரும்பாலானவை வெளிநாட்டு நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்பதை இது மேலும் உறுதிப்படுத்துகிறது.கொழும்பு கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் அதிக எச்சரிக்கை மாவட்டங்களாக அரசாங்கம் அறிவித்துள்ளது ஏனெனில் இதுவரை கண்டறியப்பட்ட 102 தொற்று நோயளர்களில் பெரும்பாலானவை அந்த மாவட்டங்களான கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 10 நோயாளிகளும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேரும் கலுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.அந்த பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதா இல்லையா என்பதை விட அந்த மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் நோய் மேலும் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்பது அவசியம் என்று டொக்டர் ஜாசிங்க பொதுமக்களை வலியுறுத்தினார்.link: http://www.jaffnamuslim.com/2020/03/dr_25.html title: முகக்கவசத்தை தவறாக பயன்படுத்தினால் கொரோனா ஏற்படும் வாய்ப்பு - Dr பாபா பாலிஹவதன
Wed, Mar 25 2020 13:01:55

0 Comments

Live Radio App

நேரடி வானொலி


சமூக வலைத்தளம்அரசியல் வீடியோ


வசந்தம் தொலைக்காட்சிஎம்மைப்பற்றி

நேர்மையான அரசியலின் மாற்று அரங்கம் - இது மக்களின் நியாயத்தராசு.
உங்களது செய்திகளை தராசு இணையத்தில் பதிவு செய்ய கீழுள்ள மின்னஞ்சலூடு தொடர்புகொள்ளுங்கள்.

info@tharaasu.com